சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

பஞ்சாபை சேர்ந்த மெஹ்ரின் பிர்சடா, தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சில தெலுங்கு படங்களுக்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த படத்தில் அவர் சந்தீப் கிஷன் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த ஒரு காட்சிகூட படத்தில் இடம் பெறவில்லை. நீளம் கருதி அனைத்து காட்சிகளையும் நீக்கி விட்டார்கள். இதனால் மனம் வெறுத்தவர் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்கே திரும்பினார். தெலுங்கு, பஞ்சாபி படங்களில் நடித்தார்.
சில வருட இடைவெளிக்கு பிறகு 'பட்டாஸ்' படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவர் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வருகிறார். அப்படி இருந்தும் இப்போது அவர் கைவசம் படங்கள் இல்லை. கன்னடத்தில் நடித்த ஒரு படம் வெளிவராமல் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டிருக்கிறார். இது சினிமா வாய்ப்பு தேடுவதற்கான முயற்சி என்கிறார்கள். அதாவது கவர்ச்சியாகவும் நடிக்கத் தயார் என்பதை இந்த படங்களின் மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.




