'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த புஷ்பா இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது என அறிவித்திருந்த நிலையில் இன்னும் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறாததால் தற்போது இப்படம் டிசம்பர் 6ந் தேதி அன்று தான் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர். கடந்தவாரம் முதலே புஷ்பா 2 தள்ளிப்போவதாக செய்திகள் பரவின. இப்போது அது உண்மையாகி உள்ளது. புஷ்பா 2 படம் தள்ளிப்போவதால் மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வர வாய்ப்புள்ளது.