தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி |

இயக்குனர் சுந்தர்.சி, வடிவேலு கூட்டணி இணைந்து பணியாற்றும் படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கபட்ட நகைச்சுவை காட்சிகளாக நிறைந்திருக்கும். வின்னர், தலைநகரம், நகரம், கிரி, லண்டன் ஆகிய படங்களில் சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் பெரிதளவில் ஹிட் ஆனது.
இந்த நிலையில் மீண்டும் சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் புதிய படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. அதன்படி, சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, சுந்தர். சி இருவரும் இணைந்து நடிக்க புதிய படம் ஒன்று உருவாகுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்து வரும் வடிவேலு அந்த படத்தை முடித்ததும் சுந்தர்.சியுடன் கை கோர்க்கிறார்.