ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், 'கல்கி 2898 ஏடி'. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி உட்பட பலர் நடித்துள்ளனர். புராணம் கலந்த அறிவியல் புனைவு படமான இது வரும் 27ம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இதில் பைரவா என்ற கேரக்டரில் பிரபாஸ் நடிக்கிறார். அவரின் நண்பராக புஜ்ஜி என்ற ரோபோ கார் வருகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை மறுத்த கமல் தான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தின் டிரைலரில் அது வெளியாகி உள்ளது. பூமியை காப்பாற்ற போராடும் பிரபாசுக்கு உதவியாக வேறு கிரகத்தில் இருந்து வரும் தலைவராக கமல்ஹாசன் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தில் முக்கிய வில்லனாக நடிப்பது வங்க மொழி நடிகர் சாஸ்வதா சட்டர்ஜி என்பது தெரியவந்துள்ளது.
கோல்கட்டாவை சேர்ந்த இவர் 1996ம் ஆண்டு முதல் பெங்காலி படங்களில் நடித்து வருகிறார். 'கஹானி' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்துள்ள இவர் தற்போது 'கல்கி' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். பிரமாண்ட ஹாலிவுட் படங்களில் வில்லனாகவோ அல்லது முக்கிய கேரக்டரிலோ தென்கிழக்கு ஆசிய நடிகர்களை நடிக்க வைப்பது வழக்கம். அந்த வகையில் சாஸ்வதா சட்டர்ஜி இதில் நடிக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.