நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர் என அறியப்பட்டவர் விஜய் சேதுபதி. அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் “பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், சேதுபதி, இறைவன், தர்மதுரை, விக்ரம் வேதா, 96” ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பேரைப் பெற்றுத் தந்தன. தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது அவரது பயணம்.
கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் வில்லனாகவும், 'பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான்” ஆகிய படங்களிலும் பேசப்பட்டார். தமிழில் அவர் கதாநாயகனாக நடித்து கடைசியாக ஓடிய படம் என்றால் '96' படம்தான். 2018ல் வெளிவந்த அந்த படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த “சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், சங்கத்தமிழன், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல், மாமனிதன், டிஎஸ்பி, யாதும் ஊரே யாவரும் கேளிர், மெர்ரி கிறிஸ்துமஸ்” ஆகிய படங்கள் வியாபார ரீதியாக வசூலைக் குவிக்கவில்லை.
கடந்த வருடம் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த 'விடுதலை' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால், அப்படத்தில் கதையின் நாயகனாக சூரி தான் நடித்திருந்தார்.
கதாநாயகனாக இத்தனை தோல்விகளுக்குப் பிறகு அவர் நடித்துள்ள 'மகாராஜா' படம் நாளை மறுதினம் ஜூன் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் குறித்து கோலிவுட்டில் நல்லபடியாகப் பேசி வருகிறார்கள். தன்னுடைய தொடர் தோல்விகளிலிருந்து இந்தப் படம் மூலம் விஜய் சேதுபதி மீள்வார் என்கிறார்கள்.




