'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் | கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். நடந்து முடிந்து ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி சார்பாகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும் கூட்டணி கட்சிகளான பாஜக, ஜனசேனா கட்சி ஆகியவற்றுடன் மந்திரி சபையை அமைக்க முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சந்திரபாபு நாயுடு முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கடுத்து பவன் கல்யாண் அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்று முடிந்த பின் பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு, மற்றும் மேடை அருகில் அமர்ந்திருந்த மற்ற மத்திய அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றார் பவன் கல்யாண். அண்ணன் சிரஞ்சீவி காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார்.
நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார்.




