ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' |

நாக் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்கப் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை வெளியானது.
இந்த டிரைலருக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்து புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 24 மணி நேர சாதனையிலேயே பின்தங்கிவிட்டது. 24 மணி நேரத்தில் இப்படத்தின் தெலுங்கு டிரைலருக்கு 14.4 மில்லியன் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது.
பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'சலார், ராதே ஷ்யாம், பாகுபலி 2' ஆகிய படங்களின் டிரைலர்களைக் காட்டிலும் குறைவான பார்வைகளையே பெற்றுள்ளது. “ஆர்ஆர்ஆர், புஷ்பா” படங்களின் டிரைலர்கள் பெற்ற பார்வைகளை விடவும் பின்தங்கியுள்ளது. இது படக்குழுவிற்கு மட்டுமல்ல, பிரபாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான தகவல்தான். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளிவந்த 'குண்டூர் காரம்' படம் 24 மணி நேரத்தில் 37.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தற்போது 'கல்கி 2898 ஏடி' டிரைலர்களில் ஹிந்தி டிரைலர் 21 மில்லியன், தெலுங்கு டிரைலர் 16 மில்லியன், தமிழ் டிரைலர் 3.8 மில்லியன், மலையாள டிரைலர் 1.7 மில்லியன், கன்னட டிரைலர் 1.6 மில்லியன், தெலுங்கு டிரைலரைக் காட்டிலும், ஹிந்தி டிரைலர் அதிகப் பார்வைகளுடன் முன்னணியில் உள்ளது.