என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில்  ‛சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கப் போகிறார். தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தமாகி வருகிறார்கள். 
மேலும் இரண்டு ஹீரோயின்கள் இடம்பெறும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கமிட்டாகி விட்ட நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் இன்னொரு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே சல்மான்கானுடன் ‛தபாங்-2' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஓரிரு தமிழ் நடிகர் நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது இப்படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 
 
           
             
           
             
           
             
           
            