அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா |

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், மாண்டி தொகுதியில் எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ரணாவத்தை ஒரு பெண் சிஐஎஸ்எப் அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தான் நலமாக உள்ளதாக கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காத பாலிவுட் மீது கங்கனா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவிட்டிருந்தார். ஆனால், அதை பின்னர் டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும் அவரது பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பலர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
கங்கனா தாக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டுமே கங்கனா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.