கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனிக்க வைத்த இயக்குனர் நித்திலன் சாமிநாதன் தற்போது விஜய்சேதுபதியை வைத்து மகாராஜா என்கிற படத்தை இயக்கியுள்ளார். விஜய்சேதுபதியின் 50வது படமாக இது உருவாகியுள்ளது. ஜூன்-14ல் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை திரை உலகில் இருக்கும் சிலர் பார்த்துவிட்டு படம் மிகவும் அருமையாக வந்திருப்பதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய் ஆண்டனி ரொம்பவே ஆர்வம் காட்டினார் என்றும், ஆனால் சில காரணங்களால் அந்த படம் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டது என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.
சமீபத்தில் மகாராஜா படம் பற்றி சிலாகித்துக் கூறியுள்ள இவர் இந்த படத்தின் கதையை தான் ஏற்கனவே கேட்டிருப்பதாகவும் விஜய் ஆண்டனிக்கு அந்த கதை ரொம்பவே பிடித்திருந்ததால் அவரை வைத்து தயாரிப்பதற்காக நித்திலனிடம் பேசியதாகவும் கூறினார். ஆனால் தான் ஏற்கனவே ஒரு தயாரிப்பாளருக்கு இந்த கதையை கூறி படம் இயக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் சரியான ஹீரோ கிடைக்காமல் படம் தள்ளிப் போகிறது என்றும் இயக்குனர் நித்திலன் கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மகாராஜா படத்தை தயாரித்துள்ள அந்த தயாரிப்பாளரிடம் பேசிய தனஞ்செயன் இந்தக் கதையில் நடிப்பதற்கு விஜய் ஆண்டனி தயாராக இருக்கிறார். அவரது கால்ஷீட்டும் எங்களிடம் இருக்கிறது. இந்த கதையையும் இயக்குனரையும் எனக்கு விட்டுக் கொடுங்கள். நான் விஜய் ஆண்டனியை வைத்து தயாரித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருந்த தயாரிப்பாளர் அதை விட்டுக் கொடுக்கவும் இல்லை.. தானும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொள்கிறேன் என்று கூறிய தனஞ்செயனின் வேண்டுகோளையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடைசியில் விஜய்சேதுபதி இந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்து தற்போது மகாராஜாவாக இந்த படம் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. பல ஹீரோக்களுக்கு அவர்களது 50வது படங்கள் வெற்றி தராமல் போன நிலையில், கடந்த சில வருடங்களாகவே ஒரு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றிக்கு காத்திருக்கும் விஜய்சேதுபதிக்கு இந்த படம் கை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.