மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். தொடர்ந்து முன்னணி நடிகையாக நடித்து வந்து அவர், பின்னர் திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் கடந்த சில வருடங்களாக சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் ஸ்ரீ விஷ்ணு, ரித்து வர்மா இணைந்து நடிக்கும் ‛ஸ்வாக்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் மீரா ஜாஸ்மின்.
ராணி உத்பலா தேவி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டு இந்த தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஹசித் கோலி என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2013ல் தெலுங்கில் மோக்ஷா என்கிற் படத்தில் நடித்திருந்த மீரா ஜாஸ்மின் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து இந்த படத்தின் மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.