பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் |
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா மற்ற மொழிகளில் அதிகப் படங்களுக்கு இசையமைத்ததில்லை. இதுவரை தெலுங்கில் “சேஷு, மல்லி மல்லி சூடாலி, ஆடந்தே அடோ டைப், 7 ஜி பிருந்தாவன் காலனி, ஹாப்பி, ராம், ஆடவாரி மாடலக்கு அர்தலு வேறுலே, ராஜு பாய், ஓய், பாஞ்சா, தேனிகைன ரெட்டி, கோவிந்துடு அந்தரிவாடிலே, ஆக்சிஜன், 1945, கஸ்டடி' ஆகிய படங்களக்கு இசையமைத்துள்ளார்.
அடுத்த வாரம் வெளியாக உள்ள 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்திற்கு யுவன் தான் இசை. இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது. இப்பாடலும் வித்தியாசமான பாடலாக அமைந்துள்ளது.
இன்று வெளிவந்துள்ள 'ஸ்டார்' படத்தில் யுவனின் இசைக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் அதிகம் கிடைத்து வருகிறது. அது போலவே, 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என யுவனின் தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தொடர்ந்து தெலுங்கிலும் யுவன் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.