'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் ஹிட்டான ரன் என்கிற வெற்றிப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் பின்னர் கணவரிடம் இருந்து பிரிந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
அதே சமயம் தற்போது அவர் நடிக்கும் படங்களில் எல்லாமே அந்த பழைய மீரா ஜாஸ்மினை பார்க்க முடியவில்லை. கொஞ்சம் வயதான தோற்றம் வந்துவிட்டதை நன்றாகவே உணர முடிகிறது. இந்த நிலையில் தான் பிரபல மலையாள இயக்குனர் வி.கே பிரகாஷ் இயக்கத்தில் பாலும் பழவும் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இது உருவாகியுள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது என்கிற அறிவுப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகி மீரா ஜாஸ்மின் என்றாலும் போஸ்டரில் அவரை காணவில்லையே என்று பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். ஆனால் போஸ்டரை நன்கு உற்றுப்பார்த்தால் தான் அதில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பதே தெரிய வரும். அந்த அளவிற்கு ஆளே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத விதமாக வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் மீரா ஜாஸ்மின்.