பிளாஷ்பேக்: கவிஞருக்காக காட்சியை உருவாக்கிய எம்ஜிஆர் | 'ஸ்வீட்ஹார்ட்' படத்தால் 4 கோடி நஷ்டம்; வருத்தத்தில் யுவன் ஷங்கர் ராஜா | டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் | 'எல் 2 எம்புரான்' டிரைலர்களில் 'லைக்கா' பெயர் | ''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் | மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? |
தமிழ் சினிமாவில் பெரிய படங்களின் வருகைகளால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து நீண்ட நாட்களாகவே இருக்கிறது. சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் சிரமம் இருப்பதாக அப்படங்களின் தயாரிப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், அதை சம்பந்தப்பட்டவர்கள் தீர்த்து வைக்கத் தயாராக இல்லை.
இந்நிலையில் தற்போது 'வணங்கான், ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்களின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “சிறு படங்களின் வசூல் பாதிப்போ, திரையரங்குகள் கிடைக்காமல் போவதோ திடீரென திரைக்கு திட்டமிடப்படும் பெரும் படங்களின் வருகையால் நிகழ்கிறது. சிறு படங்கள் பப்ளிசிட்டி பண்ணி அனைத்தும் திட்டமிட்டு செலவிட்டு பின் பெரும்படங்களின் ஆக்ரமிப்பால் அல்லோகலப்படுகிறது. சிறுபடங்களின் உழைப்பு, பொருளாதாரம் முழுக்க வீணாய்ப்போகிறது.
இதற்கு முன் திட்டமிடல் வேண்டும். பெரிய படங்கள் வரவேண்டாமென்று சொல்லவில்லை. வரவேண்டும். ஆனால் சரியான தேதி திட்டமிடலோடு வெகுநாட்களுக்கு முன்பான அறிவிப்போடு வருதல் சினிமா வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும். திரையரங்க உரிமையாளர்கள்... விநியோகஸ்தர்.. தயாரிப்பாளர்கள் இணைந்து இந்த திட்டமிடலுக்கு வழிவகுக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில பெரிய படங்களை ஒரு தேதியில் ரிலீஸ் என அறிவித்துவிட்டு, பின்னர் அந்தத் தேதியிலிருந்து தள்ளி வைக்கிறார்கள். இதனால், கூடவும் சிறிய படங்களுக்கு பாதிப்பு வருகிறது. தனுஷ் நடித்துள்ள 'ராயன்' படம் அடுத்த வாரம் ஜுன் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தள்ளி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. அதை மனதில் வைத்து கூட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மேற்கண்ட பதிவைப் போட்டிருக்கலாம்.