பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
20 வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற படங்கள் சமீபகாலமாக ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. குறிப்பாக விஜய் நடித்த கில்லி படம் வெளியாகி 20 வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு அந்தபடம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களை நெருங்கி உள்ளது. படம் ரிலீஸ் ஆனபோது வசூலானது போன்று மிகப்பெரிய தொகையையும் வசூலித்துள்ளது. அதேபோல இன்னொரு பக்கம் அஜித்தின் படங்களும் சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.
இந்த நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கஜினி திரைப்படமும் வரும் ஜூன் ஏழாம் தேதி மலையாளத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இந்த படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே சமயம் சூர்யாவின் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன.. இந்த படம் ரிலீஸ் தேதியை கொண்டாட வேண்டும் என்றால் செப்டம்பர் மாதம் தான் கொண்டாட வேண்டும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் கேரளாவில் இந்த படம் ஜூன் ஏழாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய அளவில் வசூலித்ததை தொடர்ந்து கஜினியையும் அதே போன்று ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்று தெரிகிறது.