தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் விதமாக தயாராகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி'. கமல்ஹாசன், அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸின் வாகனமாக, அவரது நண்பராக புஜ்ஜி என்கிற கார் ஒன்றும் இடம் பெறுகிறது. சமீபத்தில் இந்த காரை மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தினார்கள். இந்த காரை பிரபலமான மகேந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, பிரபல பார்முலா கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் இந்த புஜ்ஜி காரை டிராக்கில் சில ரவுண்டுகள் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இந்த காரை ஓட்டிப் பார்த்துவிட்டு இது குறித்து நாக சைதன்யா கூறும் போது, “இது ஒரு தொழில்நுட்ப அதிசயம்” என்று கூறினார்.
அதேபோல நரேன் கார்த்திகேயன் கூறும்போது, “இதில் பயணிக்கும்போது ஏதோ விண்வெளியில் இருப்பது போன்றே உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.