ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ஷங்கர் இயக்க, அனிருத் இசையமைக்க, கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீடு ஜுன் 1ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த இசை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று முதலில் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது அந்த விழாவில் கலந்து கொள்வதை ரஜினிகாந்த் தவிர்க்க முடிவு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள். 'இந்தியன் 2' படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன். அதனால், அன்று அரங்கம் முழுவதும் அவருடைய ரசிகர்கள்தான் இருப்பார்கள். தான் அதில் வந்து கலந்து கொண்டால் அது வேறு விதமாகவும் போகலாம். எனவே, வரவில்லை என ரஜினி சொல்லிவிட்டதாகத் தகவல்.
சமீபகாலமாக ரஜினி, கமல் இருவரது ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளங்களில் அதிக மோதல் ஏற்படுகிறது. தேவையற்ற சர்ச்சை எதுவும் வேண்டாம் என்பதாலேயே ரஜினிகாந்த் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள்.
இருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஏதாவது அழுத்தம் கொடுத்தால் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புண்டு.