முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் | புஷ்பா- 2 பாணியில் சினி டப்ஸ் ஆப்பில் வெளியாகும் 'கேம் சேஞ்ஜர்' | கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' | பவன் கல்யாண் பட அக்ரிமெண்டில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்த நிதி அகர்வால் |
நடிகர் அஜித் தற்போது ஐதராபாத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அங்குள்ள ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அஜித் தங்கியுள்ளார். ஓட்டலிலிருந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அவரது பைக்கில் சென்று வருகிறார்.
அப்படி அவர் செல்லும் போது அவர் பின்னாலேயே சென்று ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடக்கும். இங்கு சென்னையில் நடந்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் படப்பிடிப்பை நடத்துவதில்லை.
'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலத்திற்கு ஐதராபாத்தில் நடக்கிறது. அது முடிந்த பின் அவர் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.