பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக வெளிவருவதற்கு தயாராகி வருகிறது 'கல்கி 2898 ஏடி' திரைப்படம். மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜாம்பவான் நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபாஸின் வாகனமாக ‛புஜ்ஜி' என்கிற ஒரு வித்தியாசமான காரும் முக்கிய கதாபாத்திரமாக இடம் பெறுகிறது.
கடந்த வியாழனன்று இந்த புஜ்ஜி வாகனத்தை ஒரு பிரமாண்ட விழா நடத்தி அறிமுகப்படுத்தினார்கள். இந்த நிலையில் இந்த வாகனத்தை வடிவமைத்ததற்காக பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ள பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, புஜ்ஜியை உருவாக்கியதில் தங்களது குழுவின் பங்களிப்பு குறித்து விளக்கியுள்ளார்.
“இயக்குனர் நாக் அஸ்வின் எப்போதுமே எதைப்பற்றியும் பயப்படாமல் பெரிதாக செய்ய வேண்டும் என நினைப்பவர். அவரைப் பற்றி ரொம்பவே பெருமைப்படுகிறோம். இந்த புஜ்ஜி வாகனத்தை வடிவமைப்பதற்காக சென்னையில் உள்ள எங்களது மஹிந்திரா ஆய்வுக்குழு மிகக் கடுமையாக உழைத்து இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளது. மகேந்திரா நிறுவனத்தின் சக்தி வாய்ந்த இரண்டு மோட்டார்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கேம் தொடங்கட்டும்” என்று கூறியுள்ளார்.