ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
2024ம் ஆண்டு வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துவிட்டது. இந்த 100 படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்து குறிப்பிடத்தக்க லாபத்தையும் அனைத்து தரப்பினருக்கும் கொடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே தியேட்டர்களுக்கு மக்கள் வருவதில் சில சிக்கல்கள் இருந்தது.
முழு ஆண்டுத் தேர்வுகள், தேர்தல் பிரச்சாரம், பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் என மக்களை ஆக்கிரமித்துவிட்டதால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் அதிகமாக வரவேயில்லை. தேர்வுகள், தேர்தல் சில வாரங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. கிரிக்கெட் போட்டிகளும் நேற்றோடு முடிந்து போனது. இனி, மக்களுக்கு பொழுதுபோக்கிற்கு சினிமாவை விட்டால் வேறொன்றும் கிடையாது.
எனவே, இனி வரும் வாரங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள் என எதிர்பார்க்கலாம். மாதத்திற்கு ஒரு பெரிய படம் வெளியாக உள்ளது. மற்ற நடிகர்களின் படங்களும் குறிப்பிடத்தக்க அளவில் வர உள்ளன.
மலையாள சினிமா 200 கோடி வசூலையும், தெலுங்கு சினிமா 300 கோடி வசூலையும் கடந்த படங்களைக் கொடுத்துவிட்டன. தமிழ் சினிமா அடுத்து வர உள்ள படங்கள் மூலம் 500 கோடியைக் கடக்கக் கூடிய வசூலைக் கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.