ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா என்ற படத்தில் அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு இங்கிலீஷ் காரன், பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, பில்லா என பல படங்களில் நடித்தார். சினிமாவில் மார்க்கெட் டவுன் ஆன பிறகு 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதாவுக்கு கடந்த 2022ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இந்த நிலையில் அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அதற்கு நமீதா கொடுத்த விளக்கம்: ‛‛எங்களைப் பற்றி இப்படி ஒரு வதந்தி வருவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் என் கணவருடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தேன். என்றாலும் அதையடுத்து நாங்கள் விவாகரத்து செய்து விட்டதாக இப்படி ஒரு வதந்தி வருகிறது. எந்த அடிப்படையில் எதை வைத்து இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. என்றாலும் சினிமாவில் நடிகையான பிறகு ஏராளமான வதந்திகளை பார்த்து விட்டதால், இப்படி ஒரு வதந்தி வெளியானதை பார்த்து நானும் எனது கணவரும் கவலைப்படவில்லை, சிரித்துக் கொண்டோம்''. இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.