வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள ‛பி.டி சார்' என்ற படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து பல ஊர்களுக்கும் சென்று அவர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கோவையில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிப்ஹாப் ஆதி, மீடியாக்களை சந்தித்தார்.
அப்போது, ‛‛இந்த படம் காமெடியாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தையும் வைத்திருக்கிறார் இயக்குனர். இப்படி கதை வலுவாக இருப்பதால் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் இந்த படத்தையும் மக்கள் வெற்றி படமாக்குவார்கள்'' என்று கூறினர். அவரிடம், ஓடிடியில் படங்கள் வெளியாவது குறித்து கேட்ட கேள்விக்கு, ‛‛ஓடிடி என்பது படங்களுக்கு பெரிய ரீச்சை கொடுக்கிறது. இதனால் படம் திரையரங்குகளுக்கு வந்து ஓடி முடித்த பிறகும் பெரும்பாலானோர் ஓடிடியில் பார்த்து ரசிக்கிறார்கள்.
அதே சமயம் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக்கூடிய இளைஞர்கள் கூட அடுத்தபடியாக ஓடிடியில் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தியேட்டருக்கு வருவதையும் தவிர்க்கிறார்கள். இதனால் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கக் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கருதுகிறேன். ஆனபோதிலும் இது சரியா தவறா என்பதை இப்போதே என்னால் கூற முடியாது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு தான் நிலைமை என்னவாகும் என்று கூறமுடியும் என்று பதில் அளித்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.