ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ், தெலுங்கு கடந்து தற்போது ஹிந்தி வரை சென்றுள்ளவர் நடிகை சமந்தா. தற்போது 'சிட்டால் - ஹனி பன்னி' வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா, இன்ஸ்டாகிராம் தளத்தில் அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களைப் பதிவிடுவார். நேற்று அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்றை கங்கனா ரணாவத், ஹன்சிகா, பார்வதி உள்ளிட்ட பல பிரபலங்களையும் லைக், கமெண்ட் போட வைத்துள்ளது.
தனது ட்ரைசெப் தோற்றத்தைக் காட்டும் விதத்தில் நீல வண்ண பிராலெட் டாப், நெட்டட் பேண்ட் அணிந்த புகைப்படத்துடன், “மேலும் ட்ரைசெப் தோற்றங்கள் பின்னர்,” எனப் பதிவிட்டுள்ளார்.
தனது தோற்றமும், பிட்னஸும் இன்னமும் இளமையாக இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே இந்தப் புகைப்படம் எனலாம். தனது பிட்னஸில் மிகவும் கவனத்துடன் இருக்கும் சமந்தா உடற்பயிற்சியை ரெகுலராக செய்பவர்.