2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு |

பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த 19ம் தேதி நடந்த போதை விருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் தெலுங்கு நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், ஐ.டி. ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் இந்த போதை விருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபரான வாசுவும் தெலுங்கு நடிகை ஹேமாவும் இணைந்து ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை ஹேமா வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதேபோல் மற்றொரு தெலுங்கு நடிகை ஆஷா ராயும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நான் சம்பவத்தன்று பண்ணை வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் அங்கு போதைவிருந்து நடைபெற்றது குறித்து எனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.
ஆனால் இந்த மது விருந்தில் நடிகை ஹேமா, ஆஷா ராய் உள்ளிட்ட சில தெலுங்கு நடிகைகள் பங்கேற்றுள்ளது போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதை தொடர்ந்து நடிகைகள் ஹேமா, ஆஷா ராய் உள்ளிட்ட 86 பேருக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.