தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு |
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா. தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா கொய்ராலா அதனுடன் போராடிக் கொண்டே தற்போதும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள 'ஹீரா மண்டி' என்ற வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசி உள்ளார். மனீஷா கொய்ராலா நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'நேபாளம் மற்றும் இங்கிலாந்து நட்புறவு' நிகழ்வில் அவர் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ‛‛இங்கிலாந்து - நேபாளம் இடையிலான உறவு மற்றும் 'நட்பு ஒப்பந்தம்' 100 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், அது தொடர்பான கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை கவுரவமாக கருதுகிறேன். அதில் நான் கலந்து கொண்டு பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தபோது அவர் நேபாளத்தைப் பற்றி அன்புடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
எவரஸ்ட் மலையேற்றத்துக்கு வருமாறு பிரதமர் மற்றும் அவரது குடும்பத்துக்கு அழைப்பு விடுத்தேன். மேலும், நிகழ்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் 'ஹீராமண்டி' வெப்சீரிஸை கண்டு ரசித்ததாக கூறியது ஆச்சரியமாக இருந்தது. சிலிர்த்துப் போனேன்” என நெகிழ்ந்துள்ளார். மேலும், பிரதமர் ரிஷி சுனக்குடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.