டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பரதன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், வேரதி, கவுதமி, நாசர், வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் 1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர் மகன்'. தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் இந்தப் படமும் ஒன்று. மண் மணத்துடன் கூடிய ஒரு படமாக அமைந்த படம். படத்தில் நடித்த ஒவ்வொருவருடைய கதாபாத்திரமும் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.
படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிப் போகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். படத்தை டிஜிட்டல் தரத்திற்கும் மாற்றியுள்ளார்களாம். சமீபத்தில் அதன் தரம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்க்க படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சோதித்துப் பார்த்துள்ளார்.
அடுத்தடுத்து புதிய படங்கள் வெளிவர உள்ள நிலையில் சரியான இடைவெளியில் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. 1999ல் வெளிவந்த 'படையப்பா' படம் ரீ-ரிலீஸ் ஆகப் போகிறது. அதனுடன் 'தேவர் மகன்' படமும் ரீ-ரிலீஸ் ஆனால், சிறப்பாக இருக்கும். இரண்டு படங்களிலுமே சிவாஜி கணேசன் நடித்திருப்பது கூடுதல் பெருமை.




