
சைத்ரா ரெட்டிக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் : இன்ஸ்டாகிராமில் உருக்கம்
அவர் தனது பதிவில் "போரூர் மேம்பாலத்தின் அடியில் எனது கார் நிற்கும் போது மெட்ரோ பணிகளுக்காக போடப்படும் சிமெண்ட் கலவை கார் மேல் விழுந்ததால் கார் சேதமடைந்துள்ளது. இது அந்த இடத்தில் செல்லும் பைக்கிலோ அல்லது நடந்தோ செல்பவர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும். சிலரின் அஜாக்ரதையால் பல உயிர்களை நாம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், கட்டுமான பணிகளை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும் நான் அதிகாரிகளிடம் கேட்டுகொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த அலட்சியத்திற்கு யார் பொறுப்பு? பொது பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்கு மெட்ரோ பணி ஒப்பந்ததார்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!