நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” |
மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன் நிலவு, கல்யாண வீடு உள்ளிட்டு பல மெகா சீரியல்களை இயக்கி முக்கிய வேடங்களில் நடித்தவர் திருமுருகன். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அவர் இயக்கிய கல்யாண வீடு என்ற சீரியல் முடிந்த நிலையில் அடுத்த சீரியல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது திருமுருகன் தன்னுடைய புதிய சீரியல் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் புத்தாண்டு தினத்தில் தனது புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் இயக்கிய மெட்டி ஒலி சீரியல் ஏப்ரலில் தான் துவங்கினாராம். அதேப்போல் இந்த புதிய சீரியலையும் இந்த ஏப்ரலில் ஆரம்பித்துள்ளார். இந்த சீரியலுக்குரிய பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் திருமுருகன். இவர் பரத் நடிப்பில், எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.