விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
நாதஸ்வரம் தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு உதவியாக வரும் காஜா என்கிற கதாபாத்திரத்தில் பெரோஸ் நடித்திருந்தார். இதனால் அவர் காஜா என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து திருமுருகன் எடுத்த சீரியல்களில் நடித்து வந்த அவர் கொரோனாவுக்கு பிறகு எந்தவொரு சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், காஜா பெரோஸ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது வறுமை நிலை குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நடிகர்களை பார்த்து அவர்களை போலவே செய்வேன். இதை பார்த்து சிலர் என்னை நடிக்க போகச் சொல்லி உசுப்பேற்றிவிட்டனர். அவ்வாறாக நாதஸ்வரம் ஆடிஷனுக்கு சென்றபோது தான் திருமுருகன் என்னை செலக்ட் செய்தது மட்டுமல்லாமல் சீரியல் முழுக்க கூடவே வரும் கதாபாத்திரமாக அதை மாற்றி அமைத்தார். அந்த தொடர் மூலம் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
திருமுருகன் அடுத்தடுத்து அவருடைய தொடர்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் சீரியல் எடுப்பதை நிறுத்தியுடன் எனக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனக்கும் அவரை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வீட்டில் என்னை நம்பியும் சில ஜீவன்கள் இருப்பதால் பழையபடி செல்போன் கடைக்கே வேலைக்கு வந்துவிட்டேன். இப்போது திருமுருகன் தான் என்னை பார்த்து கொள்கிறார். மூன்று மாத வாடகை பாக்கியை அவர் தான் கொடுத்தார். அம்மாவிற்கு இருதய ஆப்ரேஷனுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அவர் தான் கொடுத்து உதவினார்' என்று உருக்கமாக பேசியுள்ளார்.