சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான மதுரை முத்துவின் அப்பா ஊர் நாட்டாமையாக இருந்தவராம். பிரிட்டிஷ்காரர் காலத்தில் முத்துவின் தாத்தாவும் அதன் பிறகு அவரது அப்பாவும் முன்சீப் என்று அழைக்கக் கூடிய ஊர் நாட்டாமை பதவி வகித்துள்ளார்கள். அவரது பேச்சை சுற்று வட்டாரத்தில் இருக்கும் 12 கிராமத்துகாரர்களும் தட்டமாட்டார்களாம். இப்படிபட்ட குடும்பத்திலிருந்து வந்த மதுரை முத்துவை, அவரது அப்பா வாத்தியராகவோ, வீஏஓ அதிகாரியாகவோ பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். ஆனால், முத்து காமெடியானாக மாறியது அவரது அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கூத்தாடி ஆயிட்டியே என்று திட்டிக் கொண்டே இருப்பாராம்.
ஒருமுறை முத்துவின் தந்தை ஊர் பிரச்னைக்காக கலெக்டரிடம் சென்ற போது, கலெக்டர் என் அப்பாவிடம் 'நீங்க மதுரை முத்து அப்பாவா?' என்று கேட்டிருக்கிறார். என் நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் தான் என் அப்பாவுக்கு நானும் ஏதோ உருப்படியாக வாழ்கிறேன் என்று நம்பிக்கை வந்தது. எங்க அப்பா பெரிதாக சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் நன்றாக படிக்க வைத்தார். இப்போது நான் பெயர், புகழ், பணம் என்று இருக்கிறேன் என்று சொன்னால் அது என் அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று தனது தந்தை குறித்து மதுரை முத்து உருக்கமாக பேசியுள்ளார்.