சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியின் புகழ் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் ரீப்ளேஸ்மெண்ட் ஹீரோயினாக அறிமுகமான சைத்ரா ரெட்டி, தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 'கயல்' தொடரில் கலக்கி வரும் சைத்ரா, சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அஜித் நடித்த வலிமை படத்தில் சைத்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக அவரது புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. தற்போது அவர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுடனும் கமர்ஷியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் சைத்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.




