'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்தவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 26வது படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போகிறார். அஸ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கும் இந்த படத்தின் ப்ரமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த கதையில் ஏற்கனவே சிம்பு நடிக்க இருந்ததாகவும், அந்த கதையில்தான் தற்போது பிரதீப் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதை மறுத்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு இடத்தில் நான் கூறிய கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறு கதை என்று தெரிவித்திருப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நானும் பிரதீப் ரங்கநாதனும் ஒன்றாக பணியாற்றினோம். தற்போது நாங்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலை வருகிற மே ஒன்றாம் தேதி வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கப் போகிறோம். இப்படம் இளைஞர்களை கவரும் வகையில் சென்னையை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது என்கிறார்.