இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மகதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ் பாபு நடிப்பில் தனது புதிய படத்தை இயக்க ஆரம்பகட்ட பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் பல வெளிநாட்டு நடிகர் நடிகைகளும் நடிக்க உள்ளார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் ராஜமவுலி தனது மனைவியுடன் இணைந்து நடன பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம்பெற்ற காதலிக்கும் பெண்ணின் கைகள் என்ற பாடலுக்கு தனது மனைவி மற்றும் பல நடன கலைஞர்களுடன் இணைந்து ராஜமவுலி நடனம் ஆடும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.