மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரசிகர்கள் யாருமே எதிர்பாராத திடீர் சர்ப்ரைஸாக கார்த்திக் சுப்பராஜ் டைரக்ஷனில் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்திக் சுப்பராஜை பொறுத்தவரை சில வருடங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இவர்களுடனேயே பயணித்தவர் திடீரென ‛பேட்ட' படம் மூலமாக யு டர்ன் எடுத்து ரஜினியை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதன்பிறகு அவர் விஜய், அஜித் என முதல் நிலை ஹீரோக்களின் படங்களாக இயக்குவார் என்று நினைத்தால் தனுஷ், விக்ரம் என வேறு ரூட்டில் பயணிக்க துவங்கி விட்டார்.
இந்த நிலையில் தான் சூர்யாவை வைத்து அவர் படம் இயக்கப் போகிறார் என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதால் இது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தின் கதையை எழுதி விட்டு இரண்டு மூன்று ஹீரோக்களை மனதில் வைத்துக் கொண்டு, அது சூர்யாவுக்கும் பொருத்தமாக இருக்கும், ஒருவேளை அவர் இல்லாவிட்டால் இன்னொருவர் என்கிற நோக்கில் அவர் சூர்யாவை அணுகவில்லையாம்.. இரண்டு வருடங்களுக்கு முன்பே சூர்யாவுக்காக ஒரு ஒன்லைன் தயார் செய்து அவரிடம் கூறியபோது நன்றாக இருக்கிறது இதை முழுதாக டெவலப் பண்ணுங்கள் என சூர்யா கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
அதற்கடுத்து கார்த்திக் சுப்பராஜூம் சூர்யாவும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர். தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முடித்த பிறகு சூர்யாவுக்கான கதையை முழுவதும் சூர்யாவை மனதில் வைத்தே உருவாக்கியுள்ளாராம் கார்த்திக் சுப்பராஜ். அதிகாரப்பூர்வமாக இந்த படம் அறிவிக்கப்படும் வரை இந்த தகவல் வெளியே கசிய கூடாது என இரு தரப்பிலும் ரகசியம் காத்து அதை சாதித்தும் இருக்கிறார்கள்.