ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதை உருவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் லுக் குறித்த ஒரு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த போஸ்டரை வைத்து இந்த படம் டைம் டிராவல் கதையாக இருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த படம் தங்கக்கடத்தல் சம்பந்தமான கதையில் உருவாகிறது என்றும் ரஜினிகாந்த் ஒரு கடத்தல் மன்னனாக நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார் என்றும் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க ரஜினி தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு எப்படி சந்திரமுகி படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான வேட்டையன் பெயரை எடுத்து டைட்டிலாக பயன்படுத்திக் கொண்டாரோ, அதேபோல ரஜினி 43 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த 'கழுகு' படத்தின் டைட்டிலையே மீண்டும் இந்த படத்திற்கு பயன்படுத்தவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
1981ல் ரஜினி நடிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் கழுகு திரைப்படம் வெளியானது. வித்தியாசமான முயற்சியாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் தோல்வியை தழுவியது. அதன்பிறகு கடந்த 2012ல் கிருஷ்ணா நடிக்க கழுகு என்கிற பெயரில் ஒரு படம் வெளியானது. இந்த நிலையில் ஜெயிலர் பட இசை வெளியீட்டில் ரஜினி பேசிய காக்கா கழுகு கதை ரொம்பவே பிரபலமானது. அதனால் ரஜினியை குறிக்கும் விதமாகவும் கழுகு என்கிற டைட்டிலையே வைப்பதற்கு லோகேஷ் கனகராஜ் விரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது.