ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
லோக்சபா தேர்தலில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்களும் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறார்கள். அவர்களில் யார் யார் வெற்றி பெறப் போகிறார்கள், அடுத்து அமைய உள்ள பார்லிமென்டில் எம்.பி.,க்களாக நுழைந்து அவரவர் தொகுதி மக்களுக்காக பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் ஏற்பட்டுள்ளது.
அப்படி போட்டியிட உள்ள சில முக்கிய பிரபலங்களும், அவர்கள் போட்டியிடும் கட்சி, தொகுதியும்…
பா.ஜ., கூட்டணி
1.ராதிகா சரத்குமார், பாரதிய ஜனதா கட்சி, விருதுநகர் தொகுதி
2.தங்கர்பச்சான், பாட்டாளி மக்கள் கட்சி, கடலூர் தொகுதி
திமுக கூட்டணி
1.விஜய் வசந்த், காங்கிரஸ், கன்னியாகுமரி
நாம் தமிழர்
1.மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சி, விழுப்புரம் (தனி)
ராதிகா சரத்குமார், சினிமா, டிவி என தமிழ் சினிமா ரசிகர்களிடமும், டிவி ரசிகர்களிடமும் பிரபலமானவர். முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
இயக்குனர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் தங்கர்பச்சான். அவரும் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
கன்னியாகுமரியின் தற்போதைய எம்.பி.,யான விஜய் வசந்த் மீண்டும் அத்தொகுதியிலேயே காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவருடைய அப்பா வசந்தகுமார் மறைவை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 'சென்னை 28, நாடோடிகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தீவிர அரசியலில் இறங்கிய பின் நடிப்பதை விட்டுவிட்டார்.
விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் மு.களஞ்சியம், “பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காலி, முந்திரிக்காடு” ஆகிய படங்களை இயக்கியவர். 'கருங்காலி' படத்தில் நடித்தும் உள்ளார். முதல் முறையாக லோக் சபா தேர்தலுக்குப் போட்டியிடுகிறார்.
போட்டியிடும் இந்த சினிமா பிரபலங்களைத் தவிர பல சினிமா பிரபலங்கள், பல்வேறு கட்சிகளின் சார்பில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.