ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தெலுங்கின் இளம் முன்னணி நடிகர் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அறியப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. அவருடைய 'அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்' ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான படங்கள். குறிப்பாக 'கீதா கோவிந்தம்' படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்ற ஒரு படமாக அமைந்தது.
நேரடியாக தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்திருந்தாலும் அந்தப்படம் வெற்றி பெறாமல் போனதால் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து கடந்த ஆண்டில் வெளியான 'குஷி' படம் தமிழிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பையும், மீண்டும் 'கீதா கோவிந்தம்' கூட்டணி என்பதாலும் 'தி பேமிலி ஸ்டார்' படத்தையும் நம்புகிறார் விஜய் தேவரகொண்டா. ஏப்ரல் 7ம் தேதி தெலுங்கு, தமிழில் மட்டும் இப்படம் வெளியாகிறது.
'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் தான் 'பேமிலி ஸ்டார்' படத்தையும் இயக்கியுள்ளார். அந்தப் படத்தைப் போலவே, குடும்பம், காதல் என இந்தப் படமும் உருவாகியுள்ளதாம். விஜய்யின் நம்பிக்கை எப்படி இருக்கப் போகிறது என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.