வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

நடிகை நயன்தாரா தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர். ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். தற்போது குறிப்பிட்டு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால், அது எதுவும் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனால் அவர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் நிதிலனை அழைத்து நயன்தாரா புதிய கதை ஒன்று கேட்டுள்ளார். இதனை படமாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக நிதிலனுக்கு ரூ. 3 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.




