ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழில் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சமந்தா மீது ரசிகர்களுக்கு ஒரு அபிமானம் உண்டு. தெலுங்கில் சில பல சூப்பர் ஹிட்களில் நடித்த சமந்தா அடுத்து ஹிந்திப் பட உலகை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளார்.
ஹிந்தி வெப் தொடரான 'தி பேமிலி மேன் சீசன் 2' மூலம் ஹிந்தி ரசிகர்களிடமும் பிரபலமானார். அடுத்து 'சிட்டாடல் - ஹனி பன்னி' வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை அடுத்து ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளாராம். ஏற்கெனவே மும்பையில் தனக்கென ஒரு குழுவை நியமித்துள்ளதாகத் தகவல். அவர்கள் சமந்தாவிற்கான ஹிந்தி புராஜக்ட்களை நிர்வகிப்பார்கள் என்றும் தகவல் உள்ளது.
அவர்கள் ஆலோசனையின்படி தான் சமந்தா தற்போது தனது திரையுலகப் பயணத்தைத் தொடர்கிறார் என்கிறார்கள். நேற்று சமந்தா வெளியிட்ட சில புகைப்படங்கள் அதற்கு உதாரணம். கிளாமரை ஏற்றி அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றைப் பார்த்து 'பேஷன் பேபி' என கமெண்ட் செய்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.