அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் |
தமிழில் இனிது இனிது காதல் இனிது என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தெலுங்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். அதையடுத்து தமிழில் ஆறு, அலெக்ஸ் பாண்டியன், கந்தசாமி, புலி, சிங்கம், சிங்கம் 2, திருப்பாச்சி, வில்லு என பல படங்களுக்கு இசையமைத்தார். கடைசியாக சாமி 2 படத்திற்கு இசையமைத்தார். அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு இசையமைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் தமிழில் புதிய படங்களில் கமிட்டாகி பிஸியாகி வருகிறார். அந்த வகையில், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம், சூர்யாவின் கங்குவா, தனுஷின் குபேரா போன்ற படங்களுக்கு இசையமைப்பவர், விடாமுயற்சி படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‛குட் பேட் அக்லி' என்ற படத்திற்கும் இசையமைக்கப் போகிறார் தேவிஸ்ரீ பிரசாத்.