'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ‛கேம்சேஞ்சர்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம் சரண். பன்மொழிகளில் தயாராகும் இந்தப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தப்படத்திற்கு பின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது படத்தில் நடிக்கவுள்ளார் ராம் சரண். இயக்குனர் சுகுமார் வசனத்தில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏப்ரல் அல்லது மேயில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு 'பெடி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.