ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

இயக்குனர் சமுத்திரக்கனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் ஆகியோர் நடிப்பில் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கி வரும் படம் அரிசி. பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் விவசாயத்தின் உண்மைகளை இந்த படம் பதிவு செய்கிறது. குறிப்பாக, மேற்கத்திய உணவை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நம்முடைய பாரம்பரியத்தை அழித்து வருகிறது என்பதை மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. அரிசி படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக அறிவித்துள்ள படக்குழு, இறுதி கட்டப் பணிகளை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தின் மூலம், முதன்முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திரையில் தோன்றுகிறார். அவர் ஒரு விவசாயி என்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இளையராஜா இசையமைக்கும் அரிசி படத்தின் டீசர், ட்ரெய்லர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.




