பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' |

தமிழ்நாட்டை சேர்ந்த தீப்ஷிகா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆரி நடிக்கும் 'ரிலீஸ்' படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்குகிறார். மனோ கிரியேஷன் சார்பில் ராஜா தயாரிக்கிறார். எஸ்.சங்கர் ராம் இசை அமைக்கிறார். லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் சுந்தரபாண்டி கூறும்போது “சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில் உருவாகிறது. சென்னையை ஒட்டி, மஹேந்திரா சிட்டி பகுதியில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.