ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
பிரபல நடிகரான பிர்லா போஸ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சென்னையில் அப்பார்ட்மென்ட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் இவரது மகனை கும்பல் ஒன்று கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது போலீஸ் புகாராக மாறியுள்ள நிலையில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிர்லா போஸின் காரை அதே அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சில தினங்களுக்கு முன் மோதி சேதப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிர்லா போஸுக்கும் அந்த இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிர்லா போஸை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று அந்த இளைஞர் முடிவு செய்துள்ளார். எனவே, பிர்லா போஸ் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து 10 பேருடன் சேர்ந்து அவரது மகனை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி மீண்டும் வீட்டிலேயே விட்டு சென்றுள்ளார். பிர்லா போஸ் போலீஸாரிடம் அளித்துள்ள புகாரின் பேரில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.