பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

எதிர்நீச்சல் தொடரில் தர்ஷினி என்கிற கதாபாத்திரத்தில் பள்ளிச் சிறுமியாக நடித்து வருகிறார் மோனிஷா. சிறுவயது முதலே நடிப்பின் மீதுள்ள அதிக ஆர்வத்தால் ஜூனியர் சூப்பர் ஸ்டார், கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜிம்னாஸ்டிக், கிக் பாக்ஸிங், சிலம்பம் என தற்காப்பு கலைகளையும் கிட்டார், டிரம்ஸ், கீ போர்டு என இசைக்கலைகளையும் கற்றுக் கொண்டுள்ளார். இந்தி மற்றும் பிரென்ச் மொழிகளையும் பயின்று வருகிறார். தவிரவும் ஹார்ஸ் ரைடிங், பைக் ரைடிங் கற்றுக்கொண்டு வருகிறாராம். இப்படி படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் பெஸ்ட்டாக இருக்கும் மோனிஷாவுக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். தற்போது தனது ஆசையின் முதல்படியாக தமிழ் சினிமாவில் ஹன்சிகாவுக்கு தங்கையாக ஒரு படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மோனிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.