அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் |

சந்தானபாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், ரோஷினி மற்றும் பலர் நடிப்பில் 1991ம் ஆண்டு தீபாவளிக்கு வந்த படம் 'குணா'. கடந்த வாரம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் 'குணா' படம் படப்பிடிக்கப்பட்ட அதே குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். தமிழகத்திலும் ரசிகர்களின் பலத்த வரவேற்பில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, 'குணா' படம் இத்தனை வருடங்களுக்குப் பின்பும் கொண்டாடும் ஒரு படமாக இருக்கிறது என கமல்ஹாசன் ரசிகர்கள் பெருமிதமாய் கூறி வருகிறார்கள். ஆனால், வேறு சில எதிர் ரசிகர்களோ 'குணா' படமே 1989ல் வெளிவந்த ஸ்பானிஷ் படமான 'டை மி அப், டை மி டவுன்' படத்தின் காப்பிதானே என அந்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
அப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் மன வளர்ச்சி குன்றிய ஒரு கதாபாத்திரம். அதைத் தழுவித்தான் 'குணா' படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அப்படத்தின் சில காட்சிகளையும் 'குணா' படத்தில் பயன்படுத்தியுள்ளதாக டிரோல் செய்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த சுமார் 20 படங்கள் ஹாலிவுட் படங்களின் அதிகாரப்பூர்வமற்ற தழுவல்தான் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.