இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை பற்றிய பயோபிக் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்தவரிசையில் உலக புகழ்பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் சுயசரிதையை படமாக்க போவதாக தெலுங்குத் திரை உலகில் தகவல் உலா வர துவங்கியுள்ளது. முகமது அலி கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
முகமது அலியின் தீவிர ரசிகரான ராணா, அவரது வாழ்க்கை வரலாற்றை ரசிகர்களுக்கு இன்னும் விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராணா கூறுகையில், ‛‛நான் குத்துச்சண்டை ரசிகன். முகமது அலி, மைக் டைசன் ஆகியோரின் தீவிர ரசிகன். நான் எப்போதும் குத்துச்சண்டை வீரர்களின் டி-ஷர்ட்களை அணிவேன். மேலும் முகமது அலி வாழ்க்கை கதையை படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என தெரிவித்தார்.
தற்போது இந்த படத்தை இயக்குவதற்கு சில இயக்குனர்களிடம் ராணா பேசி வருகிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.




