ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என அறிவித்து கடந்து பல மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படம் சிம்புவின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இதனால் இந்த படத்திற்காக ஒவ்வொரு விஷயமும் பார்த்து பாரத்து படக்குழு செய்து வருகின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரமாண்ட அரங்கினுள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.