தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

கடந்த வருடத்திலிருந்து துவங்கி கடந்த வாரம் வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் மம்முட்டியின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதுடன் பொதுவான சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.. குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் மம்முட்டி வித்தியாசமான கதை அம்சம், வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவது 72 வயதிலும் சினிமா மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் படத்தில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த 80 வயது கிழவராக தோன்றி ஆச்சரியம் அளித்தார் மம்முட்டி. அதற்கு முன்னதாக வெளியான கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக தனக்கே உரிய மிடுக்கான தோற்றத்தில் மிரட்டினார். இந்த நிலையில் தற்போது போக்கிரி ராஜா, மதுர ராஜா என ஏற்கனவே தன்னை வைத்து படம் இயக்கிய புலி முருகன் புகழ் இயக்குனர் வைசாக்கின் இயக்கத்தில் டர்போ என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்த நிலையில் இதன் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் மம்முட்டியும் இன்னும் இருவரும் சேர்ந்து விசாரணைக்காக சுவர் ஓரமாக உட்காரவை வைக்கப்பட்டுள்ளது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புலி முருகன் படத்திற்கு பிறகு மதுர ராஜா, மான்ஸ்டர் என இரண்டு படங்களில் சறுக்கிய இயக்குனர் வைசாக் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என துடிப்புடன் பணியாற்றி வருவதால் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கும் என்றே சொல்லப்படுகிறது.