மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்குகிறார் மணிரத்னம் | திருமணம் செய்து கொண்டு திருப்பதியில் செட்டிலாக ஆசைப்படும் ஜான்வி கபூர் | சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் |
மலையாள திரையுலகில் கடந்த வருடம் பெரிய நடிகர்களின் படங்களை விட சின்ன பட்ஜெட் படங்கள் சில நல்ல வரவேற்பை பெற்றன. 50 கோடி வசூல் கிளப்பிலும் கூட இடம் பெற்றன. ஆனால் அவற்றின் மொத்த எண்ணிக்கையே மூன்று அல்லது நான்கு படங்கள்தான் இருந்தது. ஆனால் இந்த வருடம் அதுவும் குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து வாரம் ஒரு படம் ஹிட் ஆகி ரசிகர்களின் வரவேற்புடன் வசூலையும் சேர்த்து வாரி குவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி டொவினோ தாமஸ் நடிப்பில் 'அன்வேசிப்பின் கண்டெத்தும்' என்கிற துப்பறியும் கதை பின்னணியில் ஒரு படம் வெளியானது அதே நாளில் அறிமுக நடிகர்கள் நடிப்பில் பிரேமலு என்கிற காதல் படமும் வெளியானது. ஆச்சரியமாக இந்த இரண்டு படங்களும் வெற்றி படமாக அமைந்தன. அதிலும் குறிப்பாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்போது 50 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது.
அதற்கு அடுத்த வாரம் பிப்ரவரி 15ஆம் தேதி மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படமும் ஹிட் ஆகியுள்ளது. கருப்பு வெள்ளையில் பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறும் விதமான மாந்திரீகம் சம்பந்தப்பட்ட கதையாக இந்த படம் உருவாகி இருந்ததும் இதில் மம்முட்டி வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்ததும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தற்போது திரையரங்குகளில் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதேபோன்று மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் ஓரளவு மட்டுமே ரசிகர்களுக்கு அறிமுகமான சின்னச்சின்ன நடிகர்களை வைத்து 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற படம் வெளியானது. கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சுற்றுலா சென்றபோது தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற உடன் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சியாக ஒரு சர்வைவல் திரில்லராக இந்த படம் வெளியானது. இதற்கும் முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனமும் நல்ல வசூலும் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் இந்த பிப்ரவரி மாதம் இந்த நான்கு படங்கள் மூலமாக மலையாளத் திரையுலகிற்கு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை கொடுத்தால் ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்குக்கு வருவார்கள் என்பதையும் இது நிரூபித்துள்ளது.